தமிழகத்திலேயே முதல் முறையாக... முதல்வரின் திட்டத்தில் அசத்தும் கலெக்டர்
திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக பாரம்பரிய முறையில் மசாலாக்கள் தயாரிக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார்...
தமிழகத்திலேயே முதல் முறையாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முயற்சியால் திருவண்ணாமலையில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 36 மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மசாலாக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
"நிறைந்தது மனம்" நிகழ்ச்சியின் கீழ் வடகண்டா பட்டின் காவேரி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மசாலா பொருட்கள் தயாரிப்பு செய்வதை நேரில் ஆய்வு செய்தார்.
மதிய உணவு செயல்படுத்தப்படும் 2 ஆயிரத்து 27 அரசு பள்ளிகளில் இதை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.