நொடியில் நாசமான வாழ்க்கை. வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்
ஆரணி அருகே சனிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் அறுவடைக்குத் தயாராக இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு வாழை மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்து விழுந்தும் சேதமடைந்தன. இதனால், வாழை நடவு செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்
ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2,000 ஏக்கரில் வாழைசாகுபடி செய்யப்பட்டு உள்ளன. ஏக்கருக்கு தலா ஒருலட்சம் ரூபாய் வரை செலவுசெய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு வாழை மரங்கள் சூறைக்காற்றால் சாய்ந்து சேதமடைந்து உள்ளதாகவும், கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story