ஜாமீனில் வெளிவந்தவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - திருவள்ளூரில் பகீர் சம்பவம்
ஜாமீனில் வெளிவந்தவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - திருவள்ளூரில் பகீர் சம்பவம்
தந்தையை வெட்டிய நபரை, நண்பரின் உதவியோடு வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
பெரியபாளையம் அடுத்த பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்த காட்டன் என்பவர் 6 வழி சாலை கட்டுமான பணிகள் நிறுவனத்தில் காவலாளியாக இருந்து வந்தார். அங்கு இரும்பு பொருட்களைத் திருடியவர்களை இவர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சஞ்சய் உள்ளிட்ட 3 பேர் இவரை இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து போலீசாரின் கைதுக்கு அடுத்து, ஜாமீனில் சஞ்சய் வெளி வந்ததை அறிந்து ஆத்திரமடைந்த காட்டனின் மகன்கள் 3 பேர் உள்பட 4 பேர் சஞ்சயை சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்..
போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடைத்த சஞ்சய்யை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். பழிவாங்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..