திடீர் தர்ணாவில் ஈடுபட்ட மக்கள் - திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புதிய ஊராட்சியை உருவாக்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுப்பப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட உத்தண்டிகண்டிகை கிராமம், ஆலாடு ஊராட்சியில் அடங்கிய ஆத்திரேயமங்கலம், புலிக்குளம் ஆகிய கிராமங்களை இணைத்து, புதிய ஊராட்சி அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக உறுதியளித்த நிலையில், மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்