கனமழையால் காணாமல் போகப்போகும் ரோடு... திருவள்ளூர் மக்களுக்கு ஷாக் | Thiruvallur | TN Rain |ThanthiTV
- தோணிரேவு, ஜமீலாபாத், செஞ்சி அம்மன் நகர், அம்மா நகர் ஆகிய 4 கிராமங்களுக்கு, பழவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சிமெண்ட் சாலை, ஏரியின் ஆற்று படுக்கையில் போடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலையின் இரு பக்கங்களும், கரைந்து பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. ஏற்கனவே பாதிப்புக்குள்ளான இந்த சாலை, அடுத்து வரவுள்ள மழையால் மேலும் கரைந்து சாலை துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில், அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையின் உறுதி தாங்காமல், 4கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Next Story