பைக் மெக்கானிக் மீது கொலைவெறி தாக்குதல்... வெளியான பரபரப்பு காட்சி
திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் சதுரங்கப்பேட்டையில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு அவரிடம் இருசக்கர வாகனத்தை உடனே சரிசெய்யச் சொல்லி 3 இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் தன்னுடைய வாகனத்தை சரிசெய்து தரவேண்டும் எனக்கூறி மோகன்தாஸை ஒருமையில் பேசிய 2 இளைஞர்கள், திடீரென அவரை தாக்கியுள்ளனர். இதனால், மோகன்தாஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அப்போது, பயத்தில் ஒரு இளைஞர் ரத்தத்தை துடைத்த நிலையில், மற்றொரு இளைஞர் மீண்டும் தாக்கியுள்ளார். அப்பகுதியில் இருந்த மக்கள் மோகன்தாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...
Next Story