"ஆம்புலன்ஸ் கூட வர மாட்டுது.. " 25 ஆண்டுகள் கொடூர வாழ்க்கை.. கதறும் மக்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம் அமரன்வயல் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்திற்கு இணைப்பு சாலையான திணையத்தூர் - அமரன்வயல் கிராம சாலை 25 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்டதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். இந்த 3 கிலோ மீட்டர் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு சல்லி கற்களாக மாறிவிட்டதாகவும், இதுவரையில் சாலையை அரசாங்கம் போடவில்லை எனவும் குற்றம் சாட்டுகிறார்கள். லாயக்கற்ற சாலையால் குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை என்றும், ஆம்புலன்ஸ்கள் கூட வர முடியவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கிராமத்திற்கு நல்ல சாலை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்