இறுதி சடங்கில் வெடித்த வன்முறை..ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்

x

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் தாடூர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கிற்கு வந்திருந்த சங்கர், வஜ்ரவேல் ஆகிய இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 12 பேர் காயமடைந்த நிலையில், சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டுமென நெடுஞ்சாலை பகுதியில் போராட்டம் நடந்த நிலையில், போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட போலீசார் தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்