இரண்டு ஊருக்கு நடுவே நடந்த பாவச்செயல்...இடித்து நொறுக்கிய எம்.பி கனிமொழி

x

திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூரின் தேவேந்திரன் நகர் மற்றும் விஐபி நகர் பகுதிகளில், வெவ்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்தசூழலில் தேவேந்திரன் நகர் பகுதியில் இருந்து விஐபி நகர் வழியாக, நியாய விலை கடை மற்றும் பள்ளிகளுக்கு செல்ல முடியாத வகையில், தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள், இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி கனிமொழியிடம் மனு அளித்தனர். உடனடியாக அவர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தடுப்பு சுவரின் ஒருபகுதி இடித்து அகற்றப்பட்டது. மற்றொரு பகுதி திங்கட்கிழமைக்குள் அகற்றப்படும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்