நியாயம் கேட்க சென்ற இடத்தில் -சாதி சொல்லி திட்டிய கவுன்சிலர் - மறுநொடியே பவரை காட்டிய மக்கள்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ஊதியூர் அருகே உள்ள செங்கோடம்பாளையத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. இத்திட்டத்திற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கிய நிலையில், வார்டு உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை. இதனை தொடர்ந்து செங்கோடம்பாளையத்தை சேர்ந்த பட்டியலின மக்கள், சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினரான தீபாவிடம் சென்று பேசியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த தீபா, பட்டிலியன மக்களை அவர்களின் சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு திட்டியுள்ளார். அதிர்ச்சியான ஊர் மக்கள், காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நீதி கிடைக்காத நிலையில் ஊர் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்