கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் தாக்கிய விவகாரம் - வெளியான முக்கிய தகவல்

x

திருப்பூரில், ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணைத் தாக்கிய வழக்கில் பா.ஜ.க.-வினர் 3 பேரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆத்துப்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுவந்த அக்கட்சியினர், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பியதாக சங்கீதா என்ற பெண்ணைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

புகாரின் பேரில் சின்னச்சாமி, சீனிவாசன் மற்றும் ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் கோரி 3 பேரும் அளித்திருந்த மனு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்