நோட்டு புத்தகம் வாங்கி தராததால் ஆத்திரம் மாணவி எடுத்த விபரீத முடிவு பெற்றோர் தலையில் இறங்கிய இடி திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

x

திருப்பத்தூர் மாவட்டம் மாக்கனூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேலு மற்றும் சௌந்தரி தம்பதியினரின் மகளான ரூபிகா, திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார். இந்நிலையில், மாணவியின் சகோதரருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு பெற்றோர் புறப்பட்டதாக தெரிகிறது. அப்போது, தனக்கு நோட்டு புத்தகம் வாங்கி தருமாறு மாணவி கேட்ட நிலையில், பிறகு வாங்கி தருவதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, தனி அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. உடலை மீட்ட போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்