ஏற்கனவே 4 முடிந்த திருமணம்.. அடுத்து 17 வயது சிறுமிக்கு காதல் வலை -கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை
திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் முதல் மனைவி இறந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது... அதன்பிறகு அவர் அடுத்தடுத்து 3 பேரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது... இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகூறி கிருஷ்ணமூர்த்தி காதல் வலையில் விழ வைத்துள்ளார்... மேலும் சிறுமியை அவர் கடத்திச் சென்ற நிலையில், மகளைக் காணவில்லை என தந்தை போலீசில் புகாரளித்தார். போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த தள்ளப்பாடி கிராமத்தில் இருவரும் உள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதன் பிறகு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு போலிசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.