சட்டப்பேரவை கணக்கு பொதுக்குழு ஆய்வு- அதிருப்தியில் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மருந்துகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் தரப்பில் சரியாக விளக்கம் அளிக்காமல் திணறினர். இந்நிலையில், அனைத்தும் சரியாக இருப்பதாக தெரிவித்து விடுகிறோம் என குழுவின் உறுப்பினர் எழிலரசன் கூறினார். இதேபோல், செய்தியாளர் சந்திப்பில், அனைத்தும் சீராக இருப்பதாக குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில், ஆய்வு திருப்தி அளிக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்