கொட்டும் மழையிலும் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..விமர்சையாக நடைபெற்ற தைப்பூச தெப்பத் திருவிழா

x

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது... ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள கொட்டும் மழையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.


Next Story

மேலும் செய்திகள்