காந்தி புறக்கணிப்பு.. காமராஜர் சிலைக்கு திருமாவளவன் மரியாதை | VCK

x

சென்னை காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காமராஜர் நினைவிடத்திற்கு சென்று விட்டு காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றது பேசு பொருளாகியுள்ளது. காந்தியடிகளின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த திருமாவளவன் முதலில் அலங்கரிக்கப் பட்டிருந்த காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் நேரடியாக காமராஜர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி புறப்பட்டு சென்றார். மது ஒழிப்பை உயிர் மூச்சாக கருதிய காந்தி பிறந்த நாளில் விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் வேலையில் காந்திக்கு மரியாதை செலுத்தாமல் திருமாவளவன் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்