ரெய்டு நடக்க கூடாதுனு திருஷ்டி கழிப்பு - பூசணிக்காயை உடைத்து திரும்பியதும் வந்து நின்ற விஜிலென்ஸ்

x

ஆபீஸில் ரெய்டு நடக்க கூடாது என திருஷ்டி கழிப்பு - பூசணிக்காயை உடைத்து திரும்பியதும் ரெய்டுக்கு வந்து நின்ற விஜிலென்ஸ்

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று காலை 6 மணி அளவில் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு திருஷ்டி கழிக்கப்பட்ட வீடியோ நமது தந்தி டிவியில் செய்தியாக வெளியானது. லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறாமல் இருக்கவும், அதை மீறி நடைபெற்றால் சிக்காமல் இருக்கவும் இந்த நிகழ்வு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திடீரென அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் இறங்கினர். டி.எஸ்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், சார் பதிவாளர், எழுத்தர்கள், புரோக்கர்கள், அலுவலர்கள் உட்பட 10 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்து 64 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்