ஒரே நாளில் நாடு முழுவதும் வெளிச்சம் பெற்ற தமிழக கிராமம்.. யாருக்கு சொந்தம்? வெடித்த நாடாளுமன்றம்

x

மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா குறித்தான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார்.

மசோதா மூலம் எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது, யாருடைய உரிமையையும் பறிக்காது என்ற கிரண் ரிஜிஜு, உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக விமர்சித்தவர், காங்கிரஸின் தவறுகளை சரிசெய்யவே இந்த மசோதா என காரணங்களை பட்டியலிட்டார். தமிழக கோயிலை குறிப்பிட்டு பேசிய அவர், திருசெந்துறையில் 1,500 வருடங்கள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. ஊரை சேர்ந்தவர் 1.2 ஏக்கரை விற்க சென்ற போது, 1,500 ஆண்டுகள் பழமையான கிராமத்தில், ஊரில் மொத்த நிலங்களும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானவை என பதிவாளர் தெரிவித்திருக்கிறார். எப்போது இது நடந்தது? எல்லாவற்றையும் மத கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். முறைகேடுகளை சரிசெய்ய வேண்டியதுள்ளது என குறிப்பிட்ட கிரண் ரிஜிஜு, மாநிலங்களில் உள்ள வக்ஃபு வாரியங்களை சில மாபியாக்களே கையில் எடுத்து கொண்டிருப்பதாக எம்.பி.க்கள் புகார் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக மசோதாவை நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்