700 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம் கண்டுபிடிப்பு - மக்களின் கோரிக்கை

x

திருச்செந்தூர் அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த கல்வெட்டில் மாயக்கூத்தன் என்ற வரி காணப்படுகிறது. பெருமாள் கோயில் வழிபாடு நடைபெறுவதற்காக முற்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின் ஒப்புதலோடு வரி நீக்கி நிலம் மானியமாக வழங்கப்பட்டு அந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லை கல் இந்த கல்வெட்டு என்று தமிழாசிரியர் கார்த்திகேயன் கல்வெட்டு ஆய்வாளர் தவசிமுத்து தெரிவித்துள்ளனர். நான்கரை அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட இந்த கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்