திருச்செந்தூரில் நடந்த அதிசயம்... செடி வைக்கக் குழி தோண்டியபோது கண்ட காட்சி
திருச்செந்தூர் அருகே சீர்காட்சியில் வீட்டின் பின்புறம் செடி வைக்க குழி தோண்டிய போது ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்ட தகவல் தீயாய்ப் பரவி வருகிறது...
உடன்குடியில் பேன்சி கடை வைத்து நடத்தி வரும் வின்சென்ட் என்ற வேல்குமார் தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் செடி வைப்பதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது உள்ளே சாமி சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அச்சிலையை எடுத்து அவர் அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்... தொடர்ந்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் சிலையைப் பார்வையிட்டனர்... சாமி சிலை வீட்டின் முன்பு வைக்கப்பட்ட நிலையில் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். வட்டாட்சியர் பாலசுந்தரம் அந்தக் குழியில் வேறு ஏதேனும் சிலைகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்... தற்போது கிடைத்துள்ள சிலையானது நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுவது போல் உள்ள நிலையில், இச்சிலை வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து சாமி சிலை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது... இது நெல்லை அருங்காட்சியத்தில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.