திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா... களத்தில் இறங்கி நீதிபதி ஆய்வு | Thiruchendur | Festival

x

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு குறித்து, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

திடீர் ஆய்வை மேற்கொண்ட நீதிபதி புகழேந்தி, பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொட்டகைகளை பார்வையிட்டார். பின்னர் புதிதாக திறக்கப்பட்ட விடுதிகளை ஆய்வு செய்தார். அப்போது விடுதி அறையில் இருந்த தொலைக்காட்சியை அகற்றி விடுமாறும், விடுதிக்கு வருபவர்கள் இறை சிந்தனையுடனேயே இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, கோயில் அறங்காவலர் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்