மினி லாரிக்குள் சுரங்க பாதை போல உள் அறை.. பார்த்ததும் அதிர்ந்து போன அதிகாரிகள்
திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்த போது, உள் அறை அமைத்து 258 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்றும், ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது. மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதில் வந்த கேரளாவை சேர்ந்த ஆசிப் மற்றும் உதயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சலாம், விஜேஷ், ரகுமான் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Next Story