சில்லறைகளை பொறுமையாக கட்டி வைத்துவிட்டு ரூ.500களை தூக்கிய திருடன்-கல்லாப்பெட்டி களவாணி கைவரிசை
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள அசைவ உணவகத்தில், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் கடை ஊழியர்கள், கடையின் மேல்மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கடையின் முன்பக்க கிரில் கேட் வழியாக ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர், கல்லாப் பெட்டியை சாவி போட்டுத் திறந்து, உள்ளே இருந்த இரண்டரை லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதே போல், காய்கறிக் கடை ஒன்றிலும், தனது வேலையை காட்டிய அவர், அங்கிருந்து 10 ஆயிரம் ரூபாயை அடித்துச் சென்றுள்ளார். இதில் சிரிப்பூட்டும் விஷயம் என்னவென்றால், 10, 20 ரூபாய் நோட்டுக்களை கட்டி வைத்துவிட்டு, அதிலிருந்த 500 ரூபாய் நோட்டுக்களை மட்டும் எண்ணி, பண்டல் போட்டு எடுத்துச் சென்றுள்ளார். கொள்ளை சம்பவத்தையே, காமெடி சம்பவமாக மாற்றிய அந்த நபரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.