சிறையில் கற்றுக்கொண்ட வித்தையை வெளியே வந்ததும் ஆடிப்பார்த்த திருடன்... CCTV சிக்கிய காட்சி

x

சிறையில் இருந்தபோது சக கைதிகள் சொல்லிக்கொடுத்த வித்தையை பயன்படுத்தி, தென்காசியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளார்.

புளியங்குடி காவல் நிலையம் எதிரே வீட்டின் முன்பு இருந்த இரு சக்கர வாகனமானது கடந்த 15ம் தேதி இரவு திருடுபோனது. சிசிடிவி காட்சியை ஆராய்ந்ததில், பைக்கை திருடிய நபர் பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு, பிறகு அருகில் இருந்த பெட்ரோல் பல்க்கில் பெட்ரோலும் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிய மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், ஏற்கனவே உண்டியலை திருடியதற்காக சிறையில் இருந்ததும், அப்போது சக குற்றவாளிகளிடம் இருப்பது பைக் திருடுவது குறித்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, மாரியப்பன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்