பல்செட் தொண்டையில் சிக்கி பலியான பெண்... இப்படி எல்லாம் சாவு வருமா? அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த
திருமலைச்சாமிக்கும், அவரது சசிகலாவுக்கும் இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திருமலைச்சாமி, சிறிய மரப்பலகையை எடுத்து மனைவி சசிகலாவின் முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சசிகலாவின் வாயில் பொருத்தப்பட்டு இருந்த பல் செட் கழன்று அவரது தொண்டையில் சிக்கியது. இதில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்ககாக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சசிகலா உயிரிழந்தார். இது குறித்து சசிகலாவின் தாயார் பார்வதி அளித்த புகாரின் பேரில், திருமலைச்சாமி மீது வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.