மனைவியை வெறி நாய் போல் கடித்து குதறிய கணவன்.. தென்காசி அருகே பரபரப்பு

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், மதுபோதையில் மனைவியை கடித்து குதறிய கணவரை போலீசார் கைது செய்தனர். சங்கரன் கோவிலை சேர்ந்த ராமலிங்கம் என்பவர், அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று ஏற்பட்டு தகராறில் மனைவியை ராமலிங்கம் கடித்து குதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமலிங்கத்தை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்