விநாயகர் சிலை ஊர்வலம்.. பெண் SI-க்கு நேர்ந்த சம்பவம்? தேனியில் பரபரப்பு | Theni | Police
கடந்த 8-ஆம் தேதி மாலை ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், டிராக்டர் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, காவல்துறையினருக்கும், இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்டிப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுமதியை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது, போக்குவரத்திற்கு இடையூறு செய்து பொதுமக்களுக்கு அச்சம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சுமார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story