குவியல் குவியலாக `மாட்டு கொழுப்பு வெடிகுண்டுகள்... அதிர்ந்த போலீசார்... பரபரப்பில் தேனி
குவியல் குவியலாக `
மாட்டு கொழுப்பு வெடிகுண்டுகள்...
அதிர்ந்த போலீசார்...
பரபரப்பில் தேனி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.
பெரியகுளம் அடுத்த வடகரை காடுவெட்டி பகுதியில் உள்ள புளியோந்தோப்பில் இருந்து வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாட்டு கொழுப்புகளை உள்ளுக்குள் வைத்து தயாரிக்கப்பட்ட நாட்டு வெடி குண்டுகள், புளியந்தோப்பின் பல இடங்களில் வைக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் பாதுகாப்பு கிராம காவல் தலைவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனடிப்படையில் தோட்டத்திற்கு சென்று கிராம காவல் குழுவினர் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது. ஏ.வாடிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர், பதுங்கி இருந்து தப்பியோடிய நிலையில், அதில் சிவக்குமாரை மட்டும் குழுவினர் துரத்தி பிடித்திருக்கின்றனர். விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக இருவரும் நாட்டு வெடிகுண்டுகளை தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாரிடம் சிவக்குமார் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தோட்டத்தில் இருந்து 29 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி இருக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள ஆனந்தராஜை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.