தாலுகா ஆபிஸை அதிரவிட்ட நரிக்குறவ பெண்கள்.. தேனியில் பரபரப்பு
நாடோடிகளாக திரியும் தங்களுக்கு நிரந்தரமாக குடியிருக்க வீடு வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவ பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக கடந்த நான்காண்டுகளுக்கு முன்பாக 110 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் எனவும் நரிக்குறவ பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 4 ஆண்டுகளாக போராடியும் தங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என கூறிய நரிக்குறவ பெண்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story