திடீரென உருண்ட பாறை...சரிந்த வீடுகள்... தேனி போடியில் பரபரப்பு - மீட்கப்படும் மக்கள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கூலித்தொழிலாளர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, டாப் ஸ்டேஷன், அத்தி ஊத்து பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கொழுக்குமலை தேயிலை மற்றும் ஏலத் தோட்டத்தில் வேலைக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், காட்டாற்று வெள்ளம் காரணமாக பாறை உருண்டதால் தொழிலாளர்கள் தங்கி இருந்த வீடுகள் மண்ணில் சரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலுள்ள தோட்டத்தில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கூலித் தொழிலாளர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
Next Story