போலீஸ் ஸ்டேஷன் இடத்தில்.. வீடு கட்ட அஸ்திவாரம்.. பார்த்ததும் அதிர்ந்த போலீஸ்

x

தேனியில் காவல் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், விவசாயி வீடு கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சிலமலை ஊராட்சியில் உள்ள இடம் கிராமசபை மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்து காவல்நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறை சார்பில் இந்த முன்னெடுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த இடத்திற்கு அருகில் குடியிருக்கும் கனகராஜ் என்பவர் இது தனக்கு சொந்தமான இடம் என்று கூறி வீடுகட்டும் முயற்சியில் பூமி பூஜை செய்து வாஸ்துப்படி அஸ்திவாரம் அமைத்து, செங்கல் வைத்து கட்டடம் எழுப்பிய நிலையில், இதனை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சிலமலை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர்கள் மூலமாக பார்வையிட்டதில் காவல்நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் கனகராஜ் வீடு கட்டுவது தெரியவந்தது. ஜேசிபி மூலம் காவல்துறையினர் இடிக்க முற்பட்டபோது தானே கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தினார். போலீசார் அவருக்கு உண்மை நிலவரம் பற்றி எடுத்துக்கூறி மன்னிப்பு கடிதம் பெற்று வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர். தற்போது அந்த இடத்தில் காவல்துறை சார்பில், எச்சரிக்கை பலகையானது வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்