பிடிபடாத சிறுத்தை.. பீதியில் அதிகாரிகளை பிடித்த மக்கள்.. - தேனியில் பரபரப்பு..
தேனி மாவட்டம் கம்பத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை பிடிபடாததால், பீதியில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் கோம்பை ரோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை வனக்காப்பாளரை தாக்கியது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை, காவல், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூண்டுகள், மயக்க ஊசி, மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதே நேரத்தில், சிறுத்தை பிடிபடாததால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால், அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ட்ரோன் கேமராக்கள் கொண்டு சிறுத்தையை தேடும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளி வர வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.