1.5 கிலோ மீட்டரால் பிரிந்த ஓர் அப்பாவி உயிர்? - தேனி அருகே பெரும் சோகம்
தேனி மாவட்டம் பிச்சாங்கரை மலைகிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
சாலை வசதி செய்து தரக் கோரி இம்மலைவாழ் மக்கள் 60 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்...கோரிக்கையை தமிழக அரசு ஏற்ற நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் குரங்கணி சாலையில் இருந்து பிச்சாங்கரைக்கு மூன்றரை கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் எஞ்சிய ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பிச்சங்கரை வனப்பகுதியில் வசித்து வரும் வீராசாமி என்ற 56 வயது நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் வீராச்சாமியை டோலி கட்டி அடிவாரப் பகுதிக்கு கொண்டு வரும்போது வழியிலேயே வீராசாமி உயிர் பிரிந்தது...உடனடியாக வீராச்சாமியின் உடலை அடிவாரம் கொண்டு வந்து அங்கிருந்து வாகனம் மூலம் அவருடைய வீட்டிற்கு கொண்டு சென்றனர்... இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...உடனடியாக தமிழக அரசு வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழுமையாக சாலை வசதி செய்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...