எப்புட்றா.. அப்போ ரூ. 400 இப்போ ரூ.15000.. எகிறிய மின் கட்டணம்.. புலம்பும் குடிசைவாசிகள்
தஞ்சையில் உள்ள கிராமத்தில் முறையாக மின் கணக்கீடு செய்யவில்லை என மக்கள் குற்றசாட்டு முன்வைத்துள்ளனர்...
தஞ்சை மாவட்டம், குருவிக்கரம்பை கிராமத்தில் மின் கட்டணம் அதிகளவில் வந்திருப்பதால் அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது வரை 400 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரையும், பல வீடுகளில் 15 ஆயிரம் ரூபாய் வரையும் மின் கட்டணம் வந்துள்ளது. முறையாக மின் கணக்கீடு செய்யவில்லை எனவும், சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் சரியாக பதிகளிக்கவில்லை எனவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
Next Story