ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய வீடுகளுக்கு மட்டுமே குறி... தமிழகத்தை அலறவிட்ட நியூ பவாரியா கேங்க்
ரயில்வே தண்டவாளங்களை
ஒட்டிய வீடுகளுக்கு மட்டுமே குறி
தமிழகத்தை அலறவிட்ட நியூ பவாரியா
மக்களோடு மக்களாக வாழும் கொடூரர்கள்
தமிழகம் முழுவதும் 68 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சுமார் 1,500 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ராட்மேன் என்கிற மூர்த்தியை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்ததால், தனிப்படை அமைக்கப்பட்டு 3 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ராட்மேன் என்கிற மூர்த்தியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரில் மட்டும் 18 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இவர், தமிழ்நாடு முழுவதும் 68-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். மூர்த்தியுடன் அவருடைய கூட்டாளி அம்சராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து 63 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொள்ளையடித்த பணத்தில், மூர்த்தி விருதுநகரில் நான்கரை கோடி ரூபாயில் ஸ்பின்னிங் மில்லை வாங்கி நடத்தி வருகிறார். இவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது விருதுநகரில் 20 வழக்குகளும், மதுரையில் 14 வழக்குகளும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் 16 வழக்குகளும் உள்ளன.