மகள் வீட்டுக்கு சென்ற தாய்.. திரும்பி வந்ததும் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி
நெல்லையில் ஓய்வு பெற்ற அரசு கால்நடை மருத்துவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த கால்நடை மருத்துவர் ராஜன் மனைவி இந்திரா. ராஜன் இறந்துவிட்ட நிலையில், இந்திரா வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு 14 பவுன் நகை, 30 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் , பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story