திரைப்பட பாணியில் திருட்டு எச்சரிக்கை!! - பின்னணியில் ஒடிசா கும்பல்
கோவையில் வடமாநில இளைஞர்கள் தங்கியிருக்கும் அறைகளில் தொடர்ந்து செல்போன்கள் திருடு போன வழக்கில், ஒடிசாவை சேர்ந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு, வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறைகளில் செல்போன் மற்றும் பணம் இரவு நேரங்களில் தொடர்ந்து திருடுபோவதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கருத்தம்பட்டி அருகே திருடு போன செல்போனை விற்க வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளைஞர் ஒடிசாவை சேர்ந்த ஹேமத்குமார் மாலிக் என்பதும், தனது நண்பர்களான பிரதாப் மாலிக் மற்றும் ராஜேஷ் மாலிக் ஆகியோருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மூவரிடமிருந்தும் 15க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், மூவரும் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது.