பக்கத்து வீட்டில் திருடி செழிப்பாக வாழ்ந்த இளைஞர்.. - தாமாக முன் வந்த செய்த "பெரிய தப்பு"
நெல்லை மாவட்டம் வாழைத்தோட்டம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ரீகன். மெக்கானிக்கான இவர், தன் வீட்டில் இருந்த 18 சவரன் நகைகள் காணவில்லை எனக் கூறி போலீசில் புகாரளித்திருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மைக்கேல் ரீகனின் பக்கத்து வீட்டுக்காரான ஸ்டீபன் என்பவர், திடீரென புது பைக்குடன் செல்வ செழிப்பாக நகரில் வலம் வந்தது மைக்கேல் ரீகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மைக்கேல் ரீகன் போலீசில் புகாரளித்ததால், பதறிப்போன ஸ்டீபன், சம்பவத்தன்று மது அருந்தி வந்து மைக்கேல் ரீகனிடம் தகராறு செய்த நிலையில், போதையில் அனைத்தையும் உளறி கொட்டியிருக்கிறார். இந்நிலையில், ஸ்டீபனிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு, மைக்கேல் ரீகனின் வீட்டிலிருந்த 18 சவரன் நகைகளை ஸ்டீபன் திருடியதும், திருடிய நகைகளை அடமானம் வைத்து புது பைக் வாங்கி செழிப்புடன் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. ஸ்டீபன் அடமானம் வைத்த 18 சவரன் நகைகளையும் சேதாரமின்றி மீட்ட போலீசார், ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.