அக்காவின் திருமணத்தை கேலி செய்த இளைஞர்...கேலியை தட்டி கேட்டதால் சிறுவன் கொலை...

x

கடலூர் - சிதம்பரநாதன்பேட்டை

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு...

விசாரணையில் வெளி வந்த பகீர் உண்மை...

அக்காவின் திருமணத்தை கேலி செய்த இளைஞர்...

கேலியை தட்டி கேட்டதால் சிறுவன் கொலை...

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்னு சொல்லுவாங்க, அப்படித்தான் இங்கயும் ஒரு பள்ளி மாணவனோட வார்த்தையே அவரோட உயிருக்கு எமனா மாறி இருக்கு. பாப நாசம் படபாணியில சடலத்த மறைக்க நினைச்சவர் போலீசில் சிக்கியது எப்படி.

கடலூர் அருகே உள்ளது சிதம்பரநாதன்பட்டி கிராமம். சில நாட்களுக்கு முன்னதாக கோவில் திருவிழா கொண்டாடத்தில் இருந்த ஊரை, ஒரு துர்மரணம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது.

திருவிழா முடிந்த மறு நாள் ஒரு பள்ளிசிறுவன் கோவில் குளத்தில் சடலமாக கிடந்திருக்கிறான். இந்த செய்தி ஊர் முழுக்க தீயாக பரவ மொத்த கிராமமும் அதிர்சியில் உறைந்து போயிருந்தது.

ஏதோ தெய்வக்குத்தமாகிவிட்டதோ என ஊர் பெரியவர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் தான் அந்த மரணம் ஒரு படுகொலை என்று தெரிய வந்திருக்கிறது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிதம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன் . 13 மூன்று வயதான இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 7 வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

பள்ளி விடுமுறையின் போதெல்லாம் சிதம்பரநாதன்பட்டியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம்.

கடந்த வாரம் ஊர் கோவில் திருவிழா தொடங்கி இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார் மணிகண்டன்.

எப்போதும் போல தனது நண்பர்களோடு சேர்ந்து கொண்டு திருவிழாவில் ஆட்டம்போட்டிருக்கிறார். திருவிழாக் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள், ஆனால் மணிகன்டன் மட்டும் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. திருவிழா என்பதால் நண்பர்களோடு சேர்ந்து தூங்கி இருப்பார் என நினைத்து அவரது உறவினர்களும் மணிகண்டனை தேடாமல் விட்டிருக்கிறார்கள்.

ஆனால் அடுத்த நாள் காலை, மணிகண்டன் கோவில் குளத்தில் சடலமக கிடந்த செய்தி தான் வந்திருக்கிறது.

உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை தொடங்கியிருக்கிறார்கள்.

முதலில் மணிகண்டன் தானாக விழுந்து இறந்திருக்கலாம் என்று தான் ஊரே நம்பியது, ஆனால் மணிகண்டனின் பிரேத பரிசோதனை முடிவு, விசாரணையின் போக்கையே தலைகீழாக மாற்றி இருக்கிறது.

மணிகண்டன் துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.


இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் , அந்த ஊர் மொத்தத்தையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மணிகண்டனைப் பற்றி விசாரிக்க தொடங்கி இருக்கிறார்கள். அப்போது தான் அவர் வயதுக்கு சம்மந்தம் இல்லாதா தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.

7 ஆம் வகுப்பு படித்து வந்த மணிகன்டனுக்கு தண்ணி, கஞ்சா என இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஊரில் இருக்கும் பலரிடமும் வம்பு வளர்த்து வந்திருக்கிறார். இதனால் அவருக்கு இளம் வயதிலேயே எதிரிகளும் அதிகமாகி இருக்கிறார்கள்.

மணிகண்டனுக்கு பிடிக்காதவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்த போது தான் அந்த லிஸ்டில் இருந்த ராகுலின் மீது சந்தேகம் வலுத்திருக்கிறது.

உடனே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது தான் மொத்த உண்மையும் ஒன்று விடாமல் கக்கி இருக்கிறார் ராகுல்.

இதே ஊரைச் சேர்ந்த ராகுல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறார். இந்த ஊருக்கு மணிகண்டன் வந்து போகும் போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதிக பிரசிங்கிதனமாக மணிகண்டனின் நடத்தை நாளடைவில் இருவருவரையும் விரோதிகளாக மாற்றிவிட்டது.

ஒருவருக்கொருவர் ஆபாசமக திட்டிக் கொள்வதும் சண்டையிடுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருவரின் சண்டையும் குழந்தை தனமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு , முன்னதாக மணிகண்டனின் அக்கா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

இந்த விசயம் ஊருக்குள் கசிய, ராகுலுக்கும் தெரிய வந்திருக்கிறது.

சென்ற முறை ஊருக்கு வந்த மணிகன்டனிடம் வழக்கம் போல மல்லுக்கு நின்ற ராகுல் அவரது அக்காவின் திருமணத்தை கேலி செய்து ஆபாசமாக திட்டி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பதிலுக்கு ராகுலின் குடும்பத்தாரை ஆபாசமாக பேசிவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டார்.

ஆனால் ஒரு பள்ளி சிறுவன் தனது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதை ராகுலால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை. மணிகண்டனை பழி வாங்க வேண்டுமெண காத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் திருவிழா கூட்டத்தில் மணிகண்டனை பார்த்த ராகுல் அவரை பின் தொடர்ந்து சென்று , தனியான இடத்தில் வைத்து தக்கி இருக்கிறார்.

ராகுலின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்ட மணிகண்டனால் எதுவும் செய்ய முடியாமல் போக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

அதன் பிறகு சடலத்தை யாருக்கும் தெரியாமல் கோவில் குளத்தில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல ஊருக்குள் தனது அன்றாட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

ஆனால் போலீசாரின் விசாரணை அவரை குற்றாவாளி கூண்டில் ஏற்றிவிட்டது. சிறுவயதில் போதை பழக்கமும், தவறான நட்புகளும் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.


Next Story

மேலும் செய்திகள்