"என் மகளோடு பேசாத..." கண்டித்த தந்தை..வீட்டில் ஓட ஓட வெட்டி கொன்ற இளைஞர் - சிவகங்கையில் அதிர்ச்சி

x

"என் மகளோடு பேசாத..." கண்டித்த தந்தை..வீட்டில் ஓட ஓட வெட்டி கொன்ற இளைஞர் - சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருமணமான மகளுடன் பழகிய இளைஞரை கண்டித்ததால் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகேயுள்ள செக்கடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். 25 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, முனியாண்டி என்பவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. முனியாண்டியின் மகளுக்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், அவருடன் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து பேசி பழகி வந்ததாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட மோதல் சம்பவத்தன்று உச்சமடைந்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து முனியாண்டியின் வீட்டிற்குள் புகுந்த பாலசுப்பிரமணியன், அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க வந்த முனியாண்டியின் தரப்பினர் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பாலசுப்பிரமணியின் தரப்பிலும் இருவர் படுகாயமடைந்தனர். இதில், உயிருக்கு போராடி கொண்டிருந்த முனியாண்டி மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பாலசுப்ரமணியம் மற்றும் அவரது நண்பர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்