ஓடி விளையாடிய பிஞ்சு குழந்தைகள்..அடுத்த நொடி அரங்கேறிய சம்பவம்..கதறி அழுத பெற்றோர்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போளூர் அடுத்த காந்திநகர் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த காவ்யா என்பவர், தங்கள் வயல் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, பின்னால் சென்ற அவரது குழந்தை மற்றும் அண்ணனின் குழந்தை, அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூச்சுத்திணறி இறந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்