"இதை செஞ்சா பணம் கையில" - ஆசை வார்த்தையில் விழுந்த பெண் - ரூ.10 லட்சத்தை சுருட்டிய இருவர்
- ஆன்-லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி, பெண்ணிடம் பத்து லட்சம் ரூபாய் பண மோசடி செய்த கும்பலை கேரளாவில் வைத்து கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம், டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், யூடியூப்பில் சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் கொடுப்பதாகவும் கூறி கும்பல் வலை விரித்துள்ளது.
- வலையில் விழுந்த அப்பெண்ணை, டாஸ்க் பெயரில் பணத்தை முதலீடு செய்ய வைத்த அந்த கும்பல், டாஸ்க் முடிந்தவுடன் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- இவ்வாறு, ஆன்லைன் வர்த்தகம் பெயரில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை இழந்த அப்பெண், போலீசில் புகாரளித்தார்.
- விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ராகவன் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் ஆகிய இருவர் பெண்ணிடம் மோசடி செய்தது தெரியவர, இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
- செல்போன் சிக்னலின் அடிப்படையில் இருவரும் கேரளாவில் இருப்பது தெரியவர, கேரளாவின் பாலக்காட்டிற்கு விரைந்த கரூர் சைபர் கிரைம் போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story