குறைகளை சொல்லி அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட பெண்..அதிர்ந்து போன கிராம சபைக் கூட்டம்..
காந்தி ஜெயந்தியை ஒட்டி பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது... இந்த கிராம சபை கூட்டத்தில் அந்த பகுதி மக்கள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர்... அப்போது பேசிய பெண் ஒருவர், பெண்களுக்காகக் கட்டப்பட்ட பொதுக் கழிவறையில் மின் விளக்கு எரியவில்லை என்றும், யாரிடம் ஒப்பந்தம் கொடுத்தீர்களோ அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது... அடுத்தடுத்து அப்பெண் தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை எடுத்துக் கூற சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
Next Story