2வது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவி, மாமியார்... அடித்து, உதைத்த காவலர்

x

சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள்பாண்டி என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கோவில்பட்டியை சேர்ந்த வர்ணஸ்ரீ-க்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து சில மாதங்களில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, காவலர் பெருமாள்பாண்டி மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டி, நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்றம் விவகாரத்து வழங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மேலநீலிதநல்லூர் வெளியப்பர் சுவாமி கோயிலில், காவலர் பெருமாள்பாண்டிக்கு, மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அப்போது அதனை தடுக்க வந்த முதல் மனைவி வர்ணஸ்ரீயின் குடும்பத்தினருக்கும், பெருமாள் பாண்டி உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்