துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி.. கோப்பையை தட்டிச் சென்ற தூத்துக்குடி அணி

x

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி, சென்னை, கொல்கத்தா, ஒடிசா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 துறைமுகங்களை சார்ந்த அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், ஒடிசா பாரதீப் துறைமுக அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 69க்கு 38 என்ற புள்ளிகள் கணக்கில் வஉசி துறைமுக அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது


Next Story

மேலும் செய்திகள்