"எனக்கு எதுவும் கேட்கல சார்" தடுப்பை உடைத்து பாய்ந்து வந்த ரயில்.. அலறி அடித்து ஓடிய மக்கள்
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் சரக்கு முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கே சரக்கு ரயில் ஒன்றை நிறுத்தும் பணியில், லோகோ பைலட்டும், கார்டும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாக்கி டாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கடைசி பெட்டியில் இருந்த கார்டுக்கும் லோகோ பைலட்டுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், ரிவர்சில் வந்த சரக்கு ரயிலானது, தண்டவாள தடுப்புகளை இடித்து தள்ளி, சாலைக்கு வந்தது. இந்த தடுப்புகள் விழுந்ததில் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாத நிலையில், சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
Next Story