கார்த்திகைதீபதிருவிழாவின் மூன்றாம் நாள் விழா - விமர்சையாக நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்
கார்த்திகை தீபதிருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, அண்ணாமலையார் ஆலயத்தில்1008 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில், 1008 சங்குகளில் அக்னி தீா்த்த குளத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீாினை ஊற்றி அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து, அண்ணாமலையாருக்கு உச்சிகால வேளையில் அபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து பக்தர்களுக்கு இந்த புனித நீர் கொடுக்கப்பட்டது. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க இந்த சங்காபிஷேகம் நடைபெறுவதாக கோயில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
Next Story