ஆளுநரிடம் நீட் விலக்கு கேட்ட மாணவியின் தந்தைக்கு சிக்கல்... - பாஜக போர்க்கொடி

x

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரும்பாலை பணியாளரை பணி நீக்கம் செய்யக்கோரி பாஜகவினர் இரும்பாலை செயல் இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Vovt

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்தேர்வு விவகாரம் குறித்து சேலம் இரும்பாலையில் பணியாற்றும் அம்மாசியப்பன், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் இரும்பாலை செயல் இயக்குநர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அம்மாசியப்பன் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசியப்பன், நிலம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த நபர் என முறைகேடாக இரும்பாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும், திமுகவிற்கு கொள்கை பரப்புச் செயலாளர் போல பணியாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக நிர்வாகிகள், அவர் மீது இரும்பாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இரும்பாலை வளாகம் முன்பு பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்