அசுர வேகத்தில் வந்த கார்..அடித்து தூக்கி அந்தரத்தில் பறந்த பெண்..கடைசியில் விட்ட திமிரு டாக்..
வடகோவையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேல்முருகன் என்பவரின் மனைவி லீலாவதி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர், காந்திபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய உத்தம குமார் என்பவர், நேற்று லீலாவதியின் உறவினர்களை நேற்று சந்தித்து அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்ததாக தெரிகிறது. ஆனால், இன்று சிகிச்சை செலவை ஏற்க மறுப்பதுடன், வழக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தம் குமாரின் ஓட்டுனர் உரிமம் காலாவதி அடைந்து விட்டது என்றும், போலீசார் முறையாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story