மின்னல் வேகத்தில் பறந்த பைக் முன்னால் சென்ற லாரியில் ஒரே இடி - துடிதுடித்து 2 பேர் பலி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்து உடலை முட்புதரில் வீசிய பூசாரியின் செயல் அதிர வைத்துள்ளது.

ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். இவரது மனைவி செல்வி. இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதில் ஆர்வலரான செல்வி, கடந்த 15ம் தேதி முதல் மாயமானதால், கணவர் பசுவராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகேயுள்ள முட்புதரில், செல்வி சடலமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பெரியாண்டிச்சி அம்மன் கோயிலின் பூசாரியான குமார் என்பவர் செல்வியை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதன் விசாரணையில், குழந்தை பாக்கியம் வேண்டி கோயிலுக்கு வந்த செல்விக்கும், பூசாரி குமாருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூசாரி குமார், செல்விக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை திருப்பித் தராமலும், ஆசைக்கு இணங்க மறுத்ததாலும், ஆத்திரமடைந்த குமார், குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்